ஹாக்கி: வாழ்வா? சாவா? நிலையில் ஸ்பெயினைச் சந்திக்கிறது இந்தியா
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் வாழ்வா? சாவா என்ற நிலையில் தனதுஅடுத்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது.
சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றே ஆகவேண்டும்என்ற நிலையில் உள்ளது. அப்போதுதான் அதற்கு அரையிறுதி வாய்ப்புபிரகாசமடையும். தோல்வியடையும் பட்சத்தில் பதக்கக் கனவை மறந்து இந்தியா நாடுதிரும்பவேண்டியதுதான்.
பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்தில் தென்கொரியாவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றதை அடுத்து இந்த இக் கட்டானநிலையில் இந்தியா உள்ளது.
இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்தியா ஒரு வெற்றி, ஒருதோல்வி, ஒரு டிரா என்று மொத்தம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஸ்பெயின் 3ஆட்டங்களில் விளையாடி 2 புள்ளிகள் எடுத்துள்ளது.
தென் கொரியாவும், ஆஸ்திரேலியாவும் புள்ளி பட்டியலில் தலா 5 புள்ளிகளுடன்முதல் இரு இடங்களில் உள்ளன.
ஸ்பெயின் உடனான போட்டியில் இந்தியா வென்று, ஆஸ்திரேலியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையேயான ஆட்டத்தில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்றாலாஅல்லது ஆட்டம் டிராவானாலோ இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு மேலும்பிரகாசமடையும்.
இந்தியா அடுத்து போலந்து அணியை எதிர்த்து விளையாடும். ஸ்பெயினைத்தோற்கடித்தாலும், போலந்தையும் இந்தியா தோற்கடிக்கவேண்டும். இருஆட்டங்களிலும் இந்தியா வெற்றிபெற்றுவிட்டால் இந்தியா எளிதாக அரையிறுதிக்குத்தகுதி பெற்றுவிடும்.
1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்குப் பிறகு அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாமுன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பதக்கக் கனவில் இந்தியாசிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ளது.
அர்ஜென்டினா அணியை வென்று ஆஸ்திரேலியா அணியுடன் டிரா செய்த போதிலும்,தென் கொரியாவுடன் ஏற்பட்ட தோல்வி இந்தியாவுக்குப் பெரிய பின்னடைவைஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications