எம்.எல்.ஏ.க்களை இழுக்கிறது பாண்டி த.மா.கா.
சென்னை:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் - த.மா.கா. கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அதிரடி முயற்சிகளை கட்சித் தலைவர் மூப்பனார் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக, இதுவரை ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் இருந்து வரும் எம்.எல்.ஏ. ஒருவர் அணி மாறுகிறார். தி.மு.க. அணியில் இருந்த அவர்அங்கிருந்து வெளியேறி காங்கிரஸ் - த.மா.கா .கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முன் வந்துள்ளார். அதோடு, விரைவில் அவர் த.மா.கா.விலும்இணைகிறார்.
த.மா.கா.வில் இருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியதால் ஏற்பட்ட எண்ணிக்கை பலத்தை சரிக்கட்ட மற்ற கட்சிகளில் இருந்துஎம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் த.மாகா. ஈடுபட்டுள்ளது.
பாண்டிச்சேரி சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி சார்பில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தார். தி.மு.க. அணியில் இடம் பெற்றிருந்த அவரை தங்கள் பக்கம்இழுந்துள்ளது த.மா.கா.
"இழுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ராஜாராம் சென்னை வந்து த.மா.கா. தலைவர் மூப்பனாரை சந்தித்து ஆசி பெற்று, காங்கிரஸ் - த.மா.கா.கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் பாண்டிச்சேரி காங்கிரஸ் - த.மா.கா. கூட்டணியின் பலம் 17 ஆக உயர்ந்துள்ளது. சண்முகம் ஆட்சிக்குஏற்பட்ட ஆபத்து நீங்கியது.
எம்.எல்.ஏ. ராஜாராம் தனது தொகுதி மக்களிடம், கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் த.மா.கா.வில் இணைவதாகவும்மூப்பனாரிடம் உறுதியளித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் - த.மா.கா. கூட்டணி ஆட்சி ஏற்பட்டதில் இருந்து அம்மாநில த.மா.கா. தலைவரும், அமைச்சருமான கண்ணன் அதிருப்தியில்இருந்தார்.
இப்போது கண்ணன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனோகர், ராஜசேகர் உடையார், ஏழுமலை ஆகியோர் த.மா.கா.வில் இருந்து விலகியுள்ளனர்.
இதனால் பாண்டிச்சேரி த.மா.கா.வில் பலம் குறைந்தது.
தேனீ ஜெயக்குமார், கந்தசாமி, பாலாஜி ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்கள் தான் த.மா.கா.வில் உள்ளனர் என்பதும், த.ம.ாகா.வை விட்டு விலகியகண்ணன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் ஆட்சிக்கு ஆதரவை தொடர்வதாக அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications