சோட்டா ராஜன் கொலை முயற்சி: 3 பாகிஸ்தானியர்கள் கைது
மும்பை:
தாதா சோட்டா ராஜனைக் கொலை செய்ய முயன்றது தொடர்பாக 3 பாகிஸ்தானியர்களை தாய்லாந்து போலீஸார் வியாழக்கிழமைகைது செய்தனர்.
இக்கும்பலைச் சேர்ந்த மேலும் 4 பேர் தப்பித்து விட்டனர். அவர்களைக் கைது செய்யவும் பாங்காக் போலீஸ் முயன்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சோட்டாராஜனையும், அவரது கூட்டாளிகளையும் தாய்லாந்த் தலைநகர் பாங்காக்கில் அடையாளம் தெரியாதகும்பல் சுட்டது. அவருடன் சென்ற இரண்டு கூட்டாளிகள் இறந்தனர். சோட்டா ராஜன், குண்டு காயத்துடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் காயமடைந்த சோட்டா ராஜனின் கூட்டாளி ரோஹித் வர்மா சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவரது உடல் மும்பைகொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் இறுதிச் சடங்கு நடந்தது.
பிரபல தாதாவான தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளிதான் சோட்டாராஜன். இருவரும் சேர்ந்து 1993 மும்பை குண்டுவெடிப்புச்சம்பவங்களில் ஈடுபட்டனர். பின்னர் கருத்துவேறுபாடு ஏற்பாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இந்த நிலையில் தாவூத் இப்ராஹிமின், கூட்டாளியான சோட்டா ஷகீல், சில அடியாட்களை விலைக்கு வாங்கி பாங்காக்கில் சோட்டாராஜனைக் கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்துள்ளது.
பாங்காக்கில் உள்ள சில சமூக விரோதக் கும்பலுக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருக்கிறதா என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications