"இலங்கையில் தமிழ் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை
ராமேஸ்வரம்:
இலங்கையில் தமிழ் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று ராமேஸ்வரத்துக்கு அகதியாக வந்த கல்லூரி மாணவி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதனால் அங்குள்ள அப்பாவித் தமிழர்கள்,தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த சில நாட்களாக அகதிகளின் வருகை குறைந்துள்ளது.
இதற்கிடையே வியாழக்கிழமை அதிகாலை ராமேஸ்வரம் பகுதியிலுள்ள தனுஷ்கோடி கடற்கரைக்கு 4 பெண்கள் உள்பட 7 அகதிகள் படகில்வந்திறங்கினர். அவர்கள் அனைவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள்.
தலைமன்னாரிலிருந்து அவர்கள் படகில் வந்ததாகத் தெரிவித்தனர். அவர்களில் கல்லூரி மாணவி பிரியதர்ஷினி என்பவரும் ஒருவர். அவர் நிருபர்களிடம்கூறுகையில், நான் கிளிநொச்சியில் வசித்து வருகிறேன். எனது தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டார். நான் மல்லாவி பகுதியிலுள்ள மகளிர் கல்லூரியில் படித்துவந்தேன்.
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதால், ராணுவ வீரர்கள் விமானத்திலிருந்து தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசித் தாக்குதல் நடத்திவருகிறார்கள். வீடுகளைத் தரைமட்டம் ஆக்குகிறார்கள்.
பெண் விடுதலைப்புலிகள் என்று கருதி, தமிழ் பெண்களை பிடித்துச் செல்கிறார்கள். தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால்தான் என்னை தமிழகத்துக்குச்சென்று விடும்படி என் தாய் என்னை, உறவினர்களுடன் அனுப்பி வைத்தார் என்றார் பிரியதர்ஷினி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications