போலீஸ் ஸ்டேசனில் புகுந்து ஆதரவாளரை மீட்ட அழகிரி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆதரவாளாரை காவல்நிலையத்துக்குச் சென்று மீட்டார் அழகிரி.

திமுக விலிருந்து அழகிரி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்துள்ள அவரது ஆதரவாளர்கள் மதுரை நகர் முழுவதும் வன்முறையில்ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் 210 க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர்.

இவர்களில் பஸ் எரிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தவிர ஒரு சிலரைப் போலீஸார் வியாழக்கிழமை விடுவித்தனர்.

விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான வட்டச்செயலாளர் முத்து தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலீஸார் தன்னைத் தாக்கியதால் தனக்குக் காயம் ஏற்பட்டதாக அவர் டாக்டர்களிடம் கூறினார். இதையடுத்து அவர் மீண்டும் திடீர் நகர் போலீஸ்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதையடுத்து, தனது ஆதரவாளர்கள் 25 க்கும் மேற்பட்ட கார்களில் திடீர்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார் அழகிரி.

பின்னர் போலீஸ் உதவி கமிஷனரிடம், முத்துவை தன்னோடு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து போலீஸார் முத்துவை, அழகிரியுடன் அனுப்பி வைத்தனர்.

இதேபோல் மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் 85 திமுக வினரை பார்க்க ஜெயிலுக்கு சென்ற அழகிரி அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் ஆப்பிள்,ஆரஞ்ச் பழங்களைக் கொடுத்து ஆறுதல் கூறினார்.

அழகிரியுடன் மதுரை நகர் திமுக செயலாளரும், எம்எல்ஏ வுமான வேலுச்சாமி, புறநகர் செயலாளர் தளப, வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி திருப்பத்தூர்எம்.எல்.ஏ. சிவராமன், துணை மேயர் பாண்டியன், நகர் முன்னாள் செயலாளர் காவேரிமணியம் உள்பட பலர் அவருடன் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+