மதுரையில் தொடர்கிறது வன்முறை
மதுரை:
அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரையில் வியாழக்கிழமையும் வன்முறையில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை காலை தங்கன்குளம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த பஸ்சை வன்முறைக் கும்பல் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதே போல் ராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து திருச்சி நோக்கு அரசு பஸ்ஒன்று திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ் மதுரை அருகே அபிராமபுரம் பகுதிக்கு வந்தபோது ஆயுதங்களுடன் அந்த பஸ்சை நிறுத்திய கும்பல் ஒன்று பஸ் பயணிகளை இறக்கி விட்டுவிட்டுபஸ்சை எரித்தனர்.
கலெக்டர் விரைந்தார்:
இச்சம்பவம் கேள்விப்பட்டதும் ராமநாதபுரம் கலெக்டர் மணிபாரதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதனால் வியாழக்கிழமையும் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவியது.
டிஜிபி உத்தரவு:
வன்முறை பரவாமல் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி.குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து டிஜிபி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஜாமீனில் வெளிவரமுடியாதபடி குண்டர்சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்.
ஒரு புறம் வன்முறைச் சம்பவங்கள் நடந்தாலும், மறுபுறம் மதுரை மாவட்டம் கட்டுக்குள்தான் இருக்கிறது. வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதுதொடர்பாக இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை 7 க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்துள்ளன. மதுரை நகரில் மொத்தம் 2 ஆயிரத்து 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்என்றார்.
இதற்கிடையில் அழகிரியின் ஆதரவாளர்களின் இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மற்ற கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications