வன்முறை பாதித்த புதுவை கிராமங்களில் மத்திய அமைச்சர்கள்
பாண்டிச்சேரி:
மத்திய அமைச்சர் சண்முகம் மற்றும் பொன்னுசாமி ஆகியோர், பாண்டிச்சேரியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை நேரில் சென்றுபார்வையிட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொடியேற்று விழாவிற்காக பாண்டிச்சேரி சென்று கொண்டிருந்த போதுஅபிஷேகப்பாக்கம் என்ற இடத்தில் அவர் சென்ற கார் மீது தாக்குதல் நடந்தது.
இத்தாக்குதலில் ராமதாஸ் காயமின்றி உயிர் தப்பினார். பாண்டிச்சேரி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மஞ்சினி உள்பட பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. குறிப்பாக பாண்டிச்சேரியில் பல கிராமங்களில் குடிசை வீடுகளுக்குதீ வைக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் பாண்டிச்சேரியில் பூரணக்குப்பம் பகுதியிலும் கலவரம் ஏற்பட்டது. பலர் தாக்கப்பட்டனர். பஸ்கள் அடித்து உடைக்கப்பட்டன. தானம்பாளையம்,ஆண்டியார்பாளையம், காசம்திட்டு கிராமங்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டன.
பூர்ணக்குப்பம் பகுதியில் கலவரம் ஏற்பட்டதால் அங்கு வாழும் மக்கள் அருகிலுள்ள அங்காளம்மன் கோவிலில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மறுக்கின்றனர். ஆண்டியார்பாளையம் பகுதியில் பள்ளிகள் எதுவும் கடந்ததிங்கள்கிழமை முதல் இயங்கவில்லை.
இந்தப் பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்கள் சண்முகம் மற்றும் பொன்னுச்சாமி ஆகியோர், கலவரத்தில் ஈடுபடாதபடி போலீஸ் பாதுகாப்பைத்தீவிரப்படுத்தும்படிக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதுதவிர, போலீஸாருடன் ஒத்துழைப்புக் கொடுக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்ட அமைச்சர்கள், இறுதியில் பாண்டிச்சேரி கவர்னர் ரஜினிராயை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications