அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 400 பணக்கார அமெரிக்கர்கள்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பலர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பைபர் ஆப்டிக்ஸ் நிறுவனத்தின் குருராஜ்தேஷ்பாண்டே, ஜூனிபர் நெட்வொர்க்ஸின் பிரதீப் சிந்து, ஆஸ்பெக்ட்டெவலப்மென்ட் நிறுவனத்தின் ரொமேஷ் வாத்வானி ஆகியோர்.
வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க குடிமக்கள் என்ற வரிசையின் கீழ் இவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர, மேலும் பல இந்தியர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் பில் கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 1994-ம் ஆண்டுமுதலே கேட்ஸ் இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.அவரது தற்போதைய சொத்து மதிப்பு 63 பில்லியன் டாலர் ஆகும். அவரதுகூட்டாளியான பால் ஆலன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications