காஷ்மீர் வருகிறது ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் குழு
டெல்லி:
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதிநிதிகள் குழு, தீவிரவாதத்தால்பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆய்வு நடத்துவதற்காக அடுத்தவாரம் இந்தியா வரவிருக்கிறது.
இக்குழுவினர் இம்மாதம் 25-ம் தேதி இந்தியா வருகிறார்கள்.
குழுவில் ஐரோப்பிய யூனியனின் தூதர் மைக்கேல் கைலோயுட் மற்றும் பெல்ஜியம்,போர்ச்சுகல், ஸ்வீடன் நாட்டின் தூதுவர்களும் கலந்து கொள்வார்கள்.
1994-ம் ஆண்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், காஷ்மீர் நிலவரம் குறித்துஆய்வு செய்யும்படி ஐரோப்பிய யூனியனைக் கேட்டுக் கொண்டது. அதையடுத்து ஆறுமுறை இக்குழுவினர் காஷ்மீர் வந்துள்ளனர். இப்போது 7-வது முறையாக இந்தியாவருகிறார்கள்.
குழுவின் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் மாறுவார். அடுத்த ஆண்டுபெல்ஜியம் நாட்டுத் தூதர் தலைவராக இருப்பார்.
மாநில அரசு, அரசியல் கட்சிகள், அரசு சாராத குழுவினருடனும் மற்றும் பொதுமக்களிடமும் காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து இக்குழுவினர் பேசுவார்கள்.
குழுவினரின் முக்கிய நோக்கம் காஷ்மீர் குறித்த உண்மையை அறிவதும் அது குறித்தரகசிய அறிக்கையை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தெரிவிப்பதும் ஆகும்.
காஷ்மீரிலிருந்து திரும்பிய பின்பு இந்தக் குழுவினர் இந்திய அதிகாரிகளுடன் தங்கள்கருத்துகளையும் பரிமாறிக் கொள்வர்.
ஐரோப்பிய யூனியன் குழுவினர், ஹுரியத் அமைப்பின் பிரதிநிதிகளையும்,மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியினரையும் சந்தித்துபேச்சு வார்த்தை நடத்துவார்கள்.அதன் பின் 11 ஆண்டு காலமாக தீவிரவாதிகளால்பாதிக்கப்பட்டு வரும் இந்து பண்டிட்களையும் சந்தித்து பேசுவார்கள் எனத் தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications