எல்லைப் பகுதி மக்களை இடம் மாற்றுகிறது ராணுவம்
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குஅருகே உள்ள 17 கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற ராணுவம் முடிவுசெய்துள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கும வகையில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது. எல்லையைக் கடந்து ஊடுறுவி இந்தியாவுக்குள் நுழையும்தீவிரவாதிகள், எல்லைப் பகுதியில் வாழும் மக்களோடு கலந்து விடுகின்றனர்.
இதைத் தடுக்க, எல்லைப் பகுதி கிராம மக்களை அங்கிருந்து இடம் மாற்ற ராணுவம்நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதகுழுக்களுக்கு தரும் ஆதரவை அதிகப்படுத்தியதும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தவறான பிரச்சாரத்தால், எல்லைப்புற கிராம மக்கள்கவரப்படுவதையும் இது தவிர்க்கும் என்று ராணுவம் நினைக்கிறது.
இதுகுறித்து ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கன்னா நிருபர்களிடம்கூறுகையில், ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை சமீப காலத்தில்இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தப் பகுதியில் 500 முதல் 600 தீவிரவாதிகள் இருந்தனர் அது இப்போது இரண்டுமடங்காகி உள்ளது. அதிக அளவில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள்அனுப்பி வருவதாலும், இந்தியாவில் உள்ள இளைஞர்களை தீவிரவாதிக் குழுக்கள்தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டுள்ளதாலும் இந்த எண்ணிக்கைஅதிகரித்துள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இந்தியர்கள் என்ற தவறான எண்ணத்தைஉருவாக்குவதற்காகத்தான், இந்திய இளைஞர்களை தீவிரவாதிகள் தங்கள் இயக்கத்தில்சேர்த்துக் கொள்கின்றனர்.
ஜம்மு பகுதியில் உள்ள தீவிரவாதிகளில் 50 சதவிகிதம் பேர் வெளிநாட்டைச்சேர்ந்தவர்கள். ராணுவம் திவிரவாதிகளின் பலத்தை அவர்களின் ரேடியோ தகவலைவழிமறித்துக் கேட்பதன் மூலமும், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் கொடுக்கும்தகவல் மூலமும் அறிந்து கொள்கிறது.
1997-ம் ஆண்டு 222 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 1998-ம் ஆண்டு 357 பேரும்கொல்லப்பட்டனர். 1999-ம் வருடம் 458 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தஆண்டு இதுவரையிலான ஒன்பதரை மாதத்தில் 550 தீவிரவாதிகள்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு பகுதியில் உள்ள 100 கிலோமீட்டர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைபாகிஸ்தான் மதிப்பதில்லை. இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச எல்லைஅமைப்பது இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் முக்கியமானதாகும். எல்லைதாண்டிய தீவிரவாதத்தையும், போதைப் பொருள் கடத்தலையும் தடுக்க இது உதவும்என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications