நீச்சல்: 14 தங்கப் பதக்கங்கள் வென்று அமெரிக்கா ஆதிக்கம்
சிட்னி:
நீச்சல் போட்டியில் அமெரிக்கா 14 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 33பதக்கங்கள் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகள் சனிக்கிழமையுடன் முடிவடைந்தன. ஆண்கள்,பெண்கள் பிரிவுகளில் மொத்தம் 32 போட்டிகள் நடத்தப்பட்டன.
மொத்தம் வழக்கப்பட்ட 33 தங்கப் பதக்கங்களில் 14 தங்கத்தை அமெரிக்காவும்ஆஸ்திரேலியா, ஹாலந்து இரண்டும் தலா 5 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளன.
இத்தாலி 3 தங்கத்தையும், ருமேனியா, உக்ரைன் தலா 2 தங்கத்தையும், ஸ்வீடன்,ஹங்கேரி தலா 1 தங்கப் பதக்கத்தையும் வென்றன.
ஆண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் போட்டியில் அமெரிக்காவுக்கு இரு தங்கப்பதக்கங்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் பெண்களுக்கான 100மீட்டர் பிரீஸ்டைல் போட்டியில் அமெரிக்காவுக்கு இரு வெண்கலப் பதக்கங்கள்வழங்கப்பட்டன.
நீச்சல் போட்டியில் மொத்தம் வழங்கப்பட வேண்டியது 32 தங்கம், 32 வெள்ளி, 32வெண்கலப் பதக்கங்கள் என 96 பதக்கங்கள்தான். ஆனால், ஒரே போட்டியில் இருதங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன.
இதனால், மொத்தம் 97 பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் அமெரிக்கா மட்டும் 33பதக்கங்களை வென்று நீச்சலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதில் 14 தங்கம், 8வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களாகும்.
நீச்சல் போட்டியில் மொத்தம் 18 நாடுகளே பதக்கங்களை வென்றுள்ளன. சிட்னிஒலிம்பிக்கில் மொத்த பதக்கப் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளசீனாவுக்கு, நீச்சலில் ஒரு பதக்கமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீச்சல் போட்டியில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது என்றாலும், ஆஸ்திரேலியாவும்ஹாலந்தும் அந் நாட்டுக்குப் பெரும் சவாலாக விளங்கின என்றால் மிகையில்லை.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications