தொடரும் வன்முறை ... அன்பழகனுக்கு கூடுதல் பாதுகாப்பு
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தொடர்ந்துவன்முறையில் ஈடுபட்டுள்ளதால் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு கூடுதல்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அழகிரியோடு திமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சிலநாட்களுக்கு அன்பழகன் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அழகிரி ஆதரவாளர்கள்பெரும் வன்முறையில் இறங்கினர். இவர்கள் வன்முறை வெறியாட்டத்தால் மதுரைநகரே ஸ்தம்பித்துப் போனது. 10 பஸ்கள் எரிக்கப்பட்டன. பல பஸ்கள் சேதமடைந்தன.
தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் கட்சி மேலிடத்திற்குத் தங்களது எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர். இந்த விவகாரம் கட்சியின் உள் விவகாரம் என்று கருணாநிதி கூறிவிட்டார்.
இந்த நிலையில திருச்சி மாவட்டத்தில் அன்பழகன் கட்சி சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளார். அழகிரி ஆதரவாளர்களால் அவருக்கு ஆபத்து நேரிடலாம் என்றசூழ்நிலை இருப்பதால் அவருக்கு கடும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. 25வாகனங்கள் அவரது பாதுகாப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைச் செயல்கள் சமூக விரோத செயலாகும் என்று அன்பழகன்வர்ணித்துள்ளார்.
மாநில கூடுதல் டி.ஜி.பி. குமாரசாமி கூறுகையில், இதுவரை வன்முறை காரணமாக 52பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 250 பேர்போலீஸாரால் பிடிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை தவிர, நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறப்புப்போலீஸ் படையைச் சேர்ந்த 5000 காவலர்கள், புற ராணுவ அதிரடிப்படை போலீஸ்ஆகியோர் இப்பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, கடந்த புதன்கிழமை முதல் நடந்து வரும் வன்முறை காரணமாக கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது ஆதரவாளர்களைசனிக்கிழமை சென்று அழகிரி பார்த்ததார். அவருடன் மதுரை நகர திமுக செயலாளர்காவேரிமணியமும் சென்றிருந்தார்.
அழகிரிப் பிரச்சினையில் மதுரை நகர திமுக நிர்வாகிகள் அனைவரும் அவர் பக்கம்இருப்பது குறிப்பிடத்தக்கது. அழகிரி விவகாரத்தில் திமுக வேலிடம் பணியாவிட்டால்ஒட்டுமொத்தமாக அவர்கள் ராஜினாமா செய்யவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆளுங்கட்சியினரே வன்முறையில் இறங்கியிருப்பதால் போலீஸ்வட்டாரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அழகிரி ஆதரவாளர்களை எப்படி டீல்செய்வது என்று அவர்கள் குழம்பியுள்ளனர்.
இந்த நிலையில், அழகிரிக்கு ஆதரவு தரும் பல திமுக எம்.எல்.ஏக்கள் சென்னைசென்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியைச் சந்தித்து தங்களதுஎதிர்ப்பை வெளிப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications