பந்த் வேண்டாம் ... கர்நாடக அமைச்சர் வேண்டுகோள்
பெங்களூர்:
கர்நாடகத்தில் 28-ம் தேதி நடத்துவதாக உள்ள பந்த் முடிவை கைவிடுங்கள் என்று சட்டஅமைச்சர் டி.பி.சந்திரேகவுடா ராஜ்குமார் ரசிகர்கள் சங்கத்தைக்கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முதல்வர் கிருஷ்ணா தலைமையில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை சர்வக் கட்சி கூட்டம் நடந்தது. அதில் ராஜ்குமாரை வீரப்பன் பிடியிலிருந்து மீட்பது,கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
வீரப்பன் பிடியிலிருந்து, ராஜ்குமாரை விடுவிப்பதற்காக இரு மாநில அரசுகளும் அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. இதில்சந்தேகம் இல்லை.
அரசுத்தூதர் கோபால் நான்காவது முறையாக காட்டுக்குச் சென்றுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை இரவு காட்டுக்குள் சென்றுள்ளார். சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், தடா கைதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றுகூறப்பட்டுள்ளது. இது இருமாநில அரசுகளையும் பலப்படுத்தியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக, மத்திய அரசுடனும், தமிழக அரசுடன் கர்நாடக தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு வருகிறது. உடல்நிலை சரியில்லாமல்மல்லய்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பர்வதம்மா ராஜ்குமார். அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று அனைத்துக் கட்சிகூட்டத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
28 ம் தேதி நடக்கும் பந்த்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சித் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.பேச்சுவார்த்தை மூலம் ராஜ்குமாரை மீட்க முடியும் என்று அரசு திடமாக நம்புகிறது. ராஜ்குமார் கடத்தப்பட்ட பிறகு 5 வது முறையாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இரு மாநில அரசுகளும் கண்டிப்பாக ராஜ்குமாரை மீட்கும். இதுகுறித்து ராஜ்குமார் குடும்பத்தினரோ அல்லது ரசிகர்களோ கவலையடைய வேண்டாம்.28 ம் தேதி பந்த் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு அரசுடன் ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது என்றார் டி.பி.சந்திரேகவுடா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications