மீண்டும் புரட்சி வரும் ...எச்சரிக்கிறது பிஜி ராணுவம்
சுவா:
பிஜியில் 1997-ம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் மீண்டும் புரட்சி நடக்கும் என்று ராணுவம் எச்சரித்துள்ளது.
1997-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டப்படி, பிஜியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் உள்பட யார் வேண்டுமானாலும் அதிபர் உள்படஅனைத்து உயர் பதவிகளையும் வகிக்க வகை செய்யப்பட்டது.
இதன் படி நடந்த முதல் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர செளத்ரி முதல் அதிபர் ஆனார். ஆனால் ஒரு ஆண்டு கழிந்த நிலையில் அவரதுஆட்சியை, பிஜி இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்பீட் புரட்சி மூலம் கவிழ்த்தார்.
இந்த நிலையில் மீண்டும் 1997-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை கொண்டு வர முயன்றால், மீண்டும் புரட்சி வெடிக்கும் என ராணுவம் எச்சரித்துள்ளது.
ராணுவச் செய்தித்தொசடர்பாளர் மேஜர் ஹோவர்ட் பொலிடினி இதுகுறித்து தலைநகர் சுவாவில் கூறுகையில், 1997-ம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல்சாசனத்தை ராணுவம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதன் பிறகு மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கும் அபாயம் உள்ளது. அதை எங்களால் தடுக்க முடியாது.எனவே மீண்டும் பிஜியில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும்.
பிஜியில் மே 19-ம் தேதி நடந்த புரட்சிக்கும், அதன் பிறகு நாட்டில் நடந்த குழப்பத்துக்கும் இந்த அரசியல் சாசனமும் ஒரு காரணம் என்பதை யாரும்மறந்து விடக் கூடாது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications