இலங்கையிருந்து 7 தமிழக மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள் சனிக்கிழமை திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.

மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பெரிய பாண்டி, சேவியர், பாண்டி, இருதயராஜ், தாசன், அழகேசன், முத்து ஆகியோர்மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீன்பிடிக்கச் சென்ற போது அவர்கள் கடலில் திசைமாறி இலங்கைக்குச் சென்று விட்டனர். அப்போது இலங்கைகடற்படை வீரர்கள் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது கடந்த நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் நடந்தது.

இவர்களை மீட்க மத்திய அரசின் உதவியுடன், தமிழக அரசு முயன்று வந்தது. பிறகு இலங்கை அரசு அவர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டது. இதையடுத்துகடந்த 22 ம் தேதி 7 மீனவர்களும் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களை மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் விமானநிலையத்தில் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+