குடும்பத்தோடு காட்டுக்குச் செல்வோம் .. ராஜ்குமார் மகன்கள்

Subscribe to Oneindia Tamil

குனிகல் (பெங்களூர்):

சத்தியமங்கலம் காட்டுக்கு 4 வது முறையாக அரசுத் தூதர் கோபால், நடிகர் ராஜ்குமாருடன் திரும்பி வரவில்லை என்றால், நாங்கள் குடும்பத்துடன்காட்டுக்குச் செல்வோம் என்று நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் தெரிவித்தார்.

கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் மற்றும் நடிகர் ராஜ்குமார் ரசிகர்கள் சார்பில் பெங்களூர் அருகே குனிகல் என்ற இடத்தில் பேரணி நடந்தது. பேரணியில்கலந்து கொள்வதற்கு முன் சிவராஜ்குமார் நிருபர்களிடம் பேசுகையில், எங்களது நடிவடிக்கைகள் அரசுக்கு எதிரானது அல்ல. எங்கள் அப்பாவைமீட்பதற்கு முதல்வர் கிருஷ்ணா எடுக்கும் நடவடிக்கைகளில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

அப்பா இல்லாமல் எங்களால் வாழ முடியாது. அவர் இல்லாததால் எங்களுக்கு நாடும் காடாகவே தெரிகிறது. அரசு எவ்வளவு முயற்சி எடுத்தும்இன்னும் வீரப்பன், எங்கள் அப்பாவை விடுவிக்கவில்லை.

இப்போது, மேற்கொண்டுள்ள பேரணி மற்றும் பந்த் முடிந்தபிறகு நாங்கள் உண்ணாவிரத சத்யாகிரகம் ஆரம்பிக்க உள்ளோம். அதன்பிறகும் எனதுதந்தை விடுவிக்கப்படவில்லையென்றால் நாங்கள் எல்லாரும் காட்டுக்குச் செல்ல விரும்புகிறோம்.

எனது தாய், காட்டுக்குச் செல்ல உடல்நிலை ஒத்துவரவில்லையென்றால் அவரை காஜனூர் வீட்டில் தங்க வைத்துவிட்டு காட்டுக்குச் செல்வோம்.வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நாங்கள் செல்லவில்லை. எங்கள் தந்தைக்காக நாங்கள் செல்கிறோம் என்றார் சிவராஜ்குமார்.

அதன்பிறகு நடந்த பேரணியில் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித், சாராகோவிந்த், ஜெயந்த், அபிநயா உள்பட நடிகைகள், நடிகர்கள்,தயாரிப்பாளர்கள, டைரக்டர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் ராகவேந்திர ராஜ்குமார் பேசுகையில், அப்பா இல்லாத உலகம் எங்களுக்கு பாலைவனம். அவர் இல்லாமல் நாங்கள் பட்ட கஷ்டங்கள்கொஞ்ச நஞ்சமல்ல. பூஜை, யாகம், சாந்தி மூலமாக பலனை எதிர்பார்த்தோம்.

அப்பா காட்டில் இருக்கிறார். அம்மா மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நிலையில் நாங்கள் எப்படி மவுனமாக இருக்க முடியும்.

மத்திய அரசும், இரு மாநில அரசுகளும் இணைந்து எங்கள் அப்பாவை விரைவில் விடுவித்துத் தர வேண்டும் என்றார். இந்த ஊர்வலத்தில்ஆயிரக்கணக்கான ராஜ்குமார் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+