வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோவை:
கோவை அருகே வனத் துறையினருக்கும், தந்தம் கடத்தும் கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.இறுதியில், இந்தக் கும்பல் கேரள வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது.
கோவை அருகே பூளுவாம்பட்டி என்ற இடத்தில் வனத் துறையினர் முகாமிட்டுள்ளனர். இந்த முகாமில், 40க்கும்மேற்பட்ட வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 17 பேர் கொண்ட ஒரு கும்பலின், நடமாட்டத்தைக்கண்டுபிடித்தனர். இவர்களை வனத்துறையினர் சுற்றி வளைக்க முயன்றபோது, அவர்கள் தங்களிடமிருந்தவேட்டைத் துப்பாக்கியால் வனத்துறையினரை நோக்கிச் சுட முயன்றனர்.
இதையடுத்து வனத்துறையினர் திருப்பிச் சுட்டனர். இந்த சண்டையில் இருதரப்பினருக்கும் எவ்வித பாதிப்பும்ஏற்படவில்லை. ஆனால், கடத்தல் கும்பலை வனத்துறையினர் தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் சென்ற இக்கும்பல், கேரள மாநிலத்திற்குள் தப்பி ஓடிவிட்டது. யானைகளை வேட்டையாடும் இக்கும்பல், காட்டின் பல இடங்களில் யானைகளைக் கொன்றுகுவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications