தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியா வந்தது இஸ்ரேல் குழு
டெல்லி:
இந்தியாவில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணிக்கு உதவுவதற்காக இஸ்ரேல் தீவிரவாததடுப்பு நிபுணர்கள் வரவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை மத்திய அரசுமறுத்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் அலுவலக தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் எலி காட்ஸிர்தலைமையில் ஒரு தீவிரவாத தடுப்பு நிபுணர் குழு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குவந்துள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
இக்குழுவினர் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கோரிக்கையின் பேரில் காஷ்மீர்வந்துள்ளதாகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் ஆய்வு நடத்திக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
இஸ்ரேல் குழுவில் மூத்த போலீஸ் கமாண்டர் ஒருவரும், இஸ்ரேல் ராணுவபுலனாய்யவு அதிகாரிகளும் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்தத் தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. அமைச்சகசெய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த செய்தியில் உண்மையில்லை. இத்தகவலைமத்தியஉள்துறை அமைச்சகமே அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது என்றார்.
இருப்பினும் இஸ்ரேல் குழு ஜம்மு,காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருப்பதை சில அரசுத் தரப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.அத்வானியின் சமீபத்திய இஸ்ரேல் சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக இஸ்ரேல் குழுதற்போது இந்தியா வந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும்இடையே நடந்த ஆலோசனையின் தொடர்ச்சியாக இஸ்ரேல் நிபுணர் குழு காஷ்மீர்வந்துள்ளதாகத் தெரிகிறது.
அத்வானி கடந்த ஜுன் மாதம் இஸ்ரேல் சென்றிருந்தபோது, அவருடன், உள்துறைச்செயலாளர் கமல் பாண்டே, எல்லைப் பாதுகாப்புப் படை டி.ஜி.பி. ராம் மோகன்,புலனாய்வுப் பிரிவு (ஐ.பி) தலைவர் சியாமள் தத்தா ஆகியோரும் சென்றிருந்தனர்.
தற்போது இந்தியா வந்துள்ள இஸ்ரேல் குழு, இந்தியாவில் தீவிரவாதத்தைஒடுக்குவதற்குத் தேவையான ஆலோசனைகளையும், திட்டங்களையும் இந்தியாவுக்குவழங்கும் என்று தெரிகிறது. தீவிரவாதிகளை ஒடுக்குவது தொடர்பான நடவடிக்கைகுறித்தும் இந்தியாவுக்கு இக்குழு ஆலோசனை வழங்கும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை ஒடுக்குவதுதொடர்பாக இஸ்ரேல் உதவியை இந்தியா நாடியுள்ளது தற்போது தெளிவாகியுள்ளது.இதன் மூலம் காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் குறைக்கவும்இந்தியா முடிவு செய்துள்ளது.
1992-ம் ஆண்டு இந்தியா, இஸ்ரேல் இடையே தூதரக உறவு புதுப்பிக்கப்பட்டது.அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை தொடர்பான உறவுகள்சீரான வேகத்தில் அபிவிருத்தி அடைந்து வருகின்றன.
இஸ்ரேலிடம் ராணுவ தளவாடங்களைவாங்குவதில் தற்போது சீனா, துருக்கிநாடுகளுக்குப் பிறகு மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications