மாரத்தான்: ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார் ஜப்பான் வீராங்கனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் ஜப்பான் வீராங்கனை டகாஹாசிநாவோகோ தங்கப் பதக்கம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் பந்தைய தூரத்தை (42 கி.மீ.) 2மணி 23.14 நிமிடங்களில் ஓடிக் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனையைப் படைத்துதங்கம் வென்றார்.
ருமேனியாவின் லிடியா சைமன் வெள்ளிப் பதக்கமும், கென்யாவின் ஜாய்ஸ்செப்சும்பா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் ஜப்பான் வீராங்கனை தங்கப்பதக்கம் பெறுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லாண்டா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாடுமா ரோபா, உலக சாதனையாளர்கென்யாவின் டெகலா லாரோப் ஆகியோர் பதக்கம் பெறத் தவறிவிட்டனர்.












Click it and Unblock the Notifications