கிண்டல் செய்யும் ஆண்களை செருப்பால் அடியுங்கள்!
சென்னை:
கிண்டல் செய்யும் ஆண்களை செருப்பால் அடியுங்கள் என்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய நீதிபதி மோகன்தெரிவித்தார்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குரல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசி நீதிபதி மோகன்கூறியதாவது:
பெண்களை ஆண்கள் கிண்டல் அடித்தல், பெண்களைப் பார்த்து விசில் அடித்தல், புடவையைப் பிடித்து இழுத்தல் என அனைத்து வகையான குற்றங்களும் ஆண்களுக்குதண்டனை தர சட்டத்தில் இடம் உள்ளது. பெண்களைக் கிண்டல் அடித்தால் நீங்கள் செருப்பைக் கழற்றி அடியுங்கள். அப்படி இல்லை என்றால் அருகில் உள்ளகாவல் நிலையத்திலாவது புகார் செய்யுங்கள்.
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்க, அதுபற்றிய சட்டங்களை அமல்படுத்த மத்திய-மாநில அரசுகள் தனியாக செல்களை அமைக்கவேண்டும். இது மிகவும் அவசியம். பெண்களுக்கு ஆலோசனை வழங்க பெரிய அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்.
பெண்களுக்கு நீதி கிடைக்க பெண் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். பெண் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். அதற்கும் பெண் போலீஸாரை அமைக்கவேண்டும். சமூகத்தில் அங்கீகாரம் பெற்ற நல்ல மனிதர்களை காவல் நிலையங்களில் பாதுகாவலர்களாக நியமிக்க வேண்டும்.
பெண்களுக்கு பொருளாதார உரிமைகள் வழங்கினால் பாதுகாப்பு கிடைக்கும். நமது நாட்டில் 52 சதவீதம் பெண்கள் உள்ளனர். ஆனால் உங்களுக்கு 33சதவீத இட ஒதுக்கீடு தர மறுக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும். இந்த இடஒதுக்கீட்டைபெற நீங்கள் போராட வேண்டும் என்றார் நீதிபதி மோகன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications