சைக்கிள் போட்டி: மவுண்டன் பைக் பிரிவில் தங்கம் வென்றார் பிரான்ஸ் வீரர்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சைக்கிள் போட்டியில் ஆண்களுக்கான மவுண்டன் பைக் பிரிவில் பிரான்ஸ் வீரர்மிகுயெல் மார்டினெஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இப் போட்டியில் அவர் பந்தைய தூரமாக 49.5 கிலோமீட்டர்தூரத்தை 2 மணி 09.02.50 நிமிடங்களில் கடந்து தங்கம் வென்றார்.
பெல்ஜியம் வீரர் பிலிப் மீர்ஹேஜி வெள்ளிப் பதக்கமும், சுவிட்சர்லாந்தின் கிறிஸ்தோப்சாஸர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இப் போட்டியில் கென்யாவின் கென் முஹின்டி கலந்து கொண்டார். ஒலிம்பிக்கில்சைக்கிள் போட்டியில் கலந்து கொண்ட முதல் கென்ய வீரர் என்ற பெருமையைப்பெற்றார்.
ஆனால், அவர் இப் போட்டியில் கலந்து கொண்ட 49 பேரில் 39-வது நபராக வந்தார்.
ஏற்கெனவே நடந்து முடிந்த பெண்களுக்கான மவுண்டன் பைக் போட்டியில்இத்தாலியின் பாவோலா பெஸ்ஸோ தங்கப் பதக்கம் வென்றார் என்பதுகுறிப்பிடத்தக்கது.![]()












Click it and Unblock the Notifications