எண்ணெய் விலையை உயர்த்த "தடை நீங்கியது
டெல்லி:
எண்ணெய் விலையை உயர்த்த மத்திய அரசுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ளகட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைவில் விலைஉயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
விலையை உயர்த்த ஒப்புதல் கொடுத்துள்ள கூட்டணிக் கட்சிகள், நுகர்வோருக்குகூடுதல் சுமையை ஏற்படுத்தாத வண்ணம் விலை உயர்வு இருக்க வேண்டும் என்றுஅரசுக்கு நிபந்தனையும் விதித்துள்ளனர்.
எண்ணெய் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்த கூட்டணிக் கட்சிகள், மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்ய அனுமதி கொடுக்கவில்லை.இக்கோரிக்கையை திருனமூல் காங்கிரஸ் விடுத்திருந்தது.
சனிக்கிழமை பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசியதலைவர்கள், நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எண்ணெய் விலைஉயர்வு இருக்க வேண்டும். அதற்கான மாற்று வழி கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பான முடிவு எடுக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம்நாயக்கிற்கு கூட்டணித் தலைவர்கள் அதிகாரம் வழங்கினர். இத்தகவலை கூட்டம்முடிந்த பின் செய்தியாளர்களிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications