அரசு எனக்குப் பாதுகாப்பு தரவில்லை என்கிறார் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

தமிழக அரசு எனக்குப் பாதுகாப்பு தரவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாஸ், விழுப்புரத்தில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழக போலீஸ் எனக்குப் போதுமான பாதுகாப்பு தரவில்லை. எனவே, எனதுபாதுகாப்புக்காக தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாகர்கோவில்சுற்றுப்பயணத்தின்போது, 12 பேரை என்னுடன் வரச் சொன்னேன்.

அவர்களை விழுப்புரத்தில் போலீஸார் கைது செய்து விட்டனர். நான்தான் அவர்களைவரச் சொன்னேன் என்று போலீஸாரிடம் அவர்கள் கூறியும் கைது செய்துள்ளனர்.தமிழக அரசு என்னுடைய உயிர் முக்கியமல்ல என்று கருதுகிறது போலும்.

புதுவையில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது, என்னைக் கொல்ல முயற்சி நடந்தது.எனக்கு அரசு அளித்த பாதுகாப்புக்கு வந்தவர்கள் வானத்தை நோக்கிக் கூட சுடாமல்நின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், தொடர்ந்து பா.ம.கவினர் மீது வெளியில் வர முடியாதஅளவுக்கு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றது. இப்படிப்பட்ட வழக்குகளை பதிவுசெய்து கூட்டணிக்கட்சிகளை ஒடுக்குவதுதான் கூட்டணி தர்மம் போல் உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையும், ஆளும் கட்சி அமைச்சரும் சேர்ந்துசர்வாதிகார ஆட்சி நடத்தி வருகின்றனர். மதுரையில் உட்கட்சி விவகாரத்தில்,வன்முறைச் சம்பவங்கள் நடந்தது. ஆனால் அதில் ஈடுபட்டவர்கள் உடனடியாகவிடுவிக்கப்பட்டனர்.

மதுரையில் இருபதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.அதற்குக் கூட பா.ம.கவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+