வீரப்பனிடமிருந்து "சிக்னல் கிடைத்தது
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக சத்தியமங்கலம் காட்டுக்கு நான்காவது முறையாக சென்றுள்ள அரசுத் தூதர், நக்கீரன் கோபால்,வீரப்பனைச் சந்திக்க அனுமதி கிடைத்து காட்டுக்குள் சென்று கொண்டிருப்பதாக நக்கீரன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 56 நாட்கள் ஆகியுள்ளன. அவரை விடுவிக்க வேண்டுமானால், 51 தமிழ்த் தடா கைதிகள், 5 தமிழ்த் தீவிரவாதிகளைவிடுதலை செய்ய வேண்டும் என்று சந்தனக் கடத்தல் வீரப்பன் கடுமையான நிபந்தனை விதித்துள்ளான்.
இவர்களை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் ராஜ்குமார் விடுதலை தாமதமாகியுள்ளது. இந்த நிலையில் கைதிகளை விடுவிப்பதில்தவறில்லை என்று கூறி தமிழக, கர்நாடக மற்றும் மத்திய அரசுகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அரசுத் தூதர் கோபால் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். இம்முறை எப்படியும் ராஜ்குமாரோடு அவர்திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காட்டுக்குள் கடும் மழை பெய்து வருவதாலும், வீரப்பனிடமிருந்து தகவல் ஏதும் வராத காரணத்தாலும் தலைமலைப் பகுதியில் கோபால் இரண்டுநாட்களாக காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் வீரப்பனிடமிருந்து, சந்திப்பு குறித்து அனுமதி கிடைத்துள்ளதாகவும், தற்போது வீரப்பனின் ஆளுடன்காட்டுக்குள் கோபால் போய்க் கொண்டிருப்பதாகவும் நக்கீரன் பத்திரிகை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் விடுதலை குறித்து மத்திய அரசின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டிருப்பதால் இம்முறை ராஜ்குமார் விடுவிப்பு சாதகமாகும் என்றுஎதிர்பார்ப்பதாகவும் நக்கீரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications