பெங்களூரில் போலீஸ் தடை உத்தரவு நீட்டிப்பு
பெங்களூர்:
பெங்களூரில் 144 போலீஸ் தடை உத்தரவு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் ஜூலை மாதம் 30-ம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து பெங்களூரில்ஏற்பட்ட பதட்டத்தால், பெங்களூரின் பல இடங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
இதனால் பெங்ளூரில் ஜூலை 31-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த தடை உத்தரவு மேலும் ஒருவார காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் மடியாள்அறிவித்துள்ளார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த தடை உத்தரவு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளின் உடல் நிலை பற்றி தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அவரது உடல் நிலை குறித்து பரப்பப்பட்டவதந்தியால் பதட்டம் ஏற்பட்டது. வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு உண்மை நிலையை அறிந்து கொள்ளலாம். பெங்களூரில் மத்திய அதிரடிப் படை,மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் கர்நாடக போலீசாரும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொது மக்களுக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படாது என அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications