இந்தியாவிற்கு நிதியுதவி அளிக்க ஜெர்மனி விருப்பம்
பெர்லின்:
2001 ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியுதவி படிப்படியாக அளிக்கப்படும் என்று ஜெர்மனி அரசுஅறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி பொருளாதார ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹெட்மரியே விக்சோரக் சியேல் கூறியதாவது:
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியுதவி அளிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள்அணுகுண்டு சோதனை நடத்தியதால் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியுதவியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தோம்.
2001 ம் ஆண்டு இந்தியாவுக்கு 100 மில்லியன் மார்க்குகளும், பாகிஸ்தானுக்கு 34 மில்லியன் மார்க்குகளும் அளிக்க தீர்மானித்துள்ளோம்.
அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு முன் ஆண்டுதோறும் ஜெர்மனியிடமிருந்து, இந்தியா 300 மில்லியன் மார்க்குகளும், பாகிஸ்தான் 100 மில்லியன்மார்க்குகளும் பெற்று வந்தன.
இந்த வருடம் ஜூலை மாதம் நடந்த மாநாட்டில், ஐரோப்பிய யூனியன், இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் இந்தியாவுக்கு நிதியுதவிஅளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஜெர்மனி அரசு இந்தியாவிற்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.
மேலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையேயுள்ள காஷ்மீர் பிரச்சனை நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கிறது. இது விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்று ஜெர்மனி விரும்புகிறது.
இந்தியாவில் 100 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். இதே போல் பாகிஸ்தானில் 45 மில்லியன் மக்கள்வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். இந்தநேரத்தில் ஜெர்மனின் நிதியுதவியால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் மிகவும் மகிழச்சியடையும்என கூறினார் சியேல்
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications