பிலிப்பைன்ஸ் ராணுவ தாக்குதலில் 100 தீவிரவாதிகள் பலி
ஜோலோ (பிலிப்பைன்ஸ்):
பிலிப்பைன்ஸில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட முஸ்லீம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பிலிப்பைன்ஸ் பிரிகேடியர் ஜெனரல் நார்சிசோ அபாயா இதுகுறித்து கூறியதாவது:
தலைநகர் மணிலாவிலிருந்து 960 கிலோமீட்டர் பகுதியில் உள்ளது ஜோலோ தீவு. இங்குள்ள முஸ்லீம் தீவிரவாதிகள், 17 பேரைப் பிணைக் கைதிகளாகப்பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க அதிரடி நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு செப்டம்பர் 16 ம் தேதி அதிபர் ஜோசப் எஸ்டிரேடா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் அப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இத்தாக்குதலில்இதுவரை 100 க்கும் மேற்பட்ட முஸ்லீம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடந்த இடத்திற்கு சாம்போன்கா பகுதியிலிருந்து பத்திரிக்கையாளர்கள் கடற்படை படகு மூலம் அழைத்து வரப்பட்டனர். முதன் முறையாகஅப்பகுதிக்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு தாக்குதல் பற்றி எடுத்துக் கூறப்பட்டது என்றார் அபாயா.
இதற்கிடையே, ஜோலோ தீவில் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் அப்பாவிப் பொதுமக்கள் பலர்பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களில் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவம் தடை விதித்திருப்பதால் அவர்களால்தாக்குதல் நடத்தும் இடங்களிலிருந்தும் வெளியேற முடியவில்லை என்று ஒரு மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications