2004-ம் ஆண்டு ஒலிம்பிக்கை ஏதென்ஸிலிருந்து மாற்றும் திட்டமில்லை - ஒலிம்பிக் கமிட்டி
சிட்னி:
2004-ம் ஆண்டின் ஒலிம்பிக்கை கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து வேறு இடத்துக்குமாற்றும் திட்டமில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கமிட்டியின் இயக்குநர் ஜெனர் பிரான்கோயிஸ் கர்ராடு,நிருபர்களிடம் கூறியதாவது:
2004-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியிகள் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நடைபெறஉள்ளது. அங்கேயே ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிக்க சர்வதேசஒலிம்பிக் கமிட்டி விரும்புகிறது.
ஆகவே, ஏதென்ஸிலிருந்து வேறு இடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகளை மாற்றி நடத்தும்திட்டம் எதுவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இல்லை.
ஏதென்ஸில் போட்டிகளை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள தனி குழுநியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் தங்களது பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர் என்றார் கர்ராடு.
ஏதென்ஸ் நகர நிர்வாகமும், ஏதென்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டியும் ஒலிம்பிக்போட்டிகளை நடத்துவது தொடர்பான பணிகளை விரைந்து மேற்கொள்ளவில்லைஎன்று வேறு இடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகள் மாற்றப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக்கமிட்டித் தலைவர் சாமரான்ச் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எச்சரிக்கையை அடுத்து ஏதென்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டி தனது பணிகளைமுடுக்கிவிட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த கமிட்டி அரசின் தலையீட்டின்பேரில்நீக்கப்பட்டு இப் புதிய கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.
2004-ம் ஆண்டு மே மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்குள்அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிடுவதாக புதிய கமிட்டி உத்தரவாதம்அளித்துள்ளது.
தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் மில்லேனியம் ஒலிம்பிக் போட்டிகளைக் காண130 பேர் கொண்ட குழு ஏதென்ஸிலிருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்த நகரில்தான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று முடிவானதற்குப்பிறகு வேறு நகரத்துக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதில்லை. 1908-ம் ஆண்டுரோமில் நடைபெற வேண்டிய போட்டிகள் லண்டனில் நடத்தப்பட்டன.
பொருளாதாரப் பிரச்சினை காரணமாக தன்னால் போட்டிகளை நடத்தமுடியாது என்றரோம் நகரம் தெரிவித்ததை அடுத்து லண்டனுக்கு அப் போட்டிகள் மாற்றப்பட்டன.மற்றபடி சர்வதே ஒலிம்பிக் கமிட்டியே நடவடிக்கை எடுத்து வேறு இடத்துக்குப்போட்டிகள் மாற்றப்பட்டதில்லை.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications