25,000 இலவச ஆணுறைகளைப் பெற்றுச் சென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள்
சிட்னி:
ஓசியில் எது கொடுத்தாலும் அதை வாங்குவதில் யாரும் தயக்கமாட்டார்கள்என்பதற்கு சிட்னி ஒலிம்பிக் கிராமத்தில் இருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.
செப்டம்பர் 2-ம் தேதி திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 25 ஆயிரம் ஆணுறைகளைஅங்கு தங்கியுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் வாங்கிச்சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னியில் தற்போது 27-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு199 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் மற்றும்அதிகாரிகள் தங்கியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளை நல்லபடியாக நடத்தி முடிக்க திட்டமிட்ட சிட்னி ஒலிம்பிக்ஏற்பாட்டுக் குழு எய்ட்ஸ் நோய் பயம் காரணமாக பாதுகாப்பான செக்ஸுக்குஏற்பாடுகள் செய்தது.
அதன்படி சிட்னி ஒலிம்பிக் கிராமத்தில் தங்குபவர்களுக்கு இலவசமாக ஆணுறைகள்வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி உள்ளூர் ஆணுறை தயாரிப்பாளரிடமிருந்துசுமார் 50 ஆயிரம் ஆணுறைகள் ஒலிம்பிக் கிராமத்துக்குத் தருவிக்கப்பட்டன.
செப்டம்பர் 2-ம் தேதி ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரைசுமார் 25 ஆயிரம் ஆணுறைகளை வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் வாங்கிச்சென்றுள்ளனர்.
ஆண்கள் மட்டுமல்ல ஏராளமான பெண்களும் ஆணுறைகளை வாங்கிச் சென்றுள்ளனர்என்று ஒலிம்பிக் கிராம செய்தித் தொடர்பாளர் வெப்ஸ்டர் தெரிவித்தார்.
வாங்கிச் சென்ற ஆணுறையை அவர்கள் பயன்படுத்தினரா என்பது தெரியாது ஆனால்,இலவசமாகக் கொடுப்பதை ஏன் விட்டுவைக்கவேண்டும். பிறகு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதை அவர்கள் வாங்கிச் சென்றிருக்கலாம் என்றும் அவர்தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications