சிறை நிரப்ப வாங்க ...! ஆள் பிடிக்கிறது த.மா.கா.
கோவை:
சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆட்களைத் தேடிப் பிடிக்கிறது தமிழ் மாநிலகாங்கிரஸ்.
அதிக ஆட்களைப் பிடித்துத் தரும் வார்டு பிரதிநிதிக்கு தங்க மோதிரம்,வெட்கிரைண்டர், உட்பட பல பரிசுப் பொருட்கள் காத்திருக்கின்றன.
தமிழ் மாநில காங்கிரஸ், தன் பலத்தை பரிசோதனை செய்து கொள்ளவும், 15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 27ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்நடத்த முடிவு செய்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு தொண்டர்கள் எந்த அளவிற்குமுன் வருவார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிறை நிரப்பும் போராட்ட விஷயத்தில், முதல்வர் கருணாநிதி மிகவும் கடுமையாகநடந்து கொள்வார் என தமிழ் மாநில காஙகிரஸ் தொண்டர்கள் அஞ்சுகின்றனர்.முதல்வர் கருணாநிதியும், சட்டம் தனது கடமையைச் செய்யும் எனக் கூறியுள்ளதால்,எப்படியும் 15 நாட்கள் உள்ளே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என கோவை த.மா.க.,வினர் கருதுகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, ஆட்களை அதிகமாகத் திரட்டினால் தான் உடனடியாகஅன்றே விடுதலை கிடைக்கும் என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். மேலும், பலத்தைநிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என மாவட்டத் தலைவர்கள் ஆர்வம்கொண்டுள்ளனர்.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் தங்கள் பலத்தைக் காட்ட த.மா.க, தயாராகிவருகிறது. இதற்கென பல வார்டுத் தலைவர்களுக்கு "சிறப்பு பரிசுகள்காத்திருக்கின்றன.
கோவையில் உள்ள 72 வார்டுகளில் அதிகத் தொண்டர்களை சிறைக்கு அழைத்துச்செல்பவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பதாக மாநகர் மாவட்டப் பொருளாளர்தாராகவி அறிவித்துள்ளார்.
வாய்மொழியாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த பரிசுத் திட்டத்தால், வார்டுத்தலைவர்கள் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.
இன்னும் சில இடங்களில் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு கட்சித் தொண்டர்கள்அல்லாத அப்பாவி மக்களையும் அழைக்க சிலர் தந்திரங்களையும்மேற்கொண்டுள்ளனர். இதன்படி, ஏழைகளுக்குச் சிலர் பட்டா வாங்கித் தருவதாகக்கூறியுள்ளனர் அல்லது போராட்டத்தில் கலந்து கொள்வோருக்கு ரூ. 100 வரைவழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் பகுதியிலிருந்து அதிக ஆட்களைத் திரட்டி வருபவருக்கு ஒருவெட்கிரைண்டர் பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறை நிரம்பும்அளவிற்கு த.மா.கா. வில் தொண்டர்கள் உள்ளனரா என்பது செப்டம்பர் 27-ம் தேதிதெரிய வரும்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications