பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் பேச்சு குறித்து வாஜ்பாய் கருத்து
டெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பி.ஓ.கே.) முன்னாள் பிரதமர், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்தாலும், காஷ்மீர் பிரச்சனைக்குத்தீர்வு காண உதவுவார் என்று பிரதமர் வாஜ்பாய் நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னாள் பிரதமர் சர்தார் அப்துல் கயாம். இவர் அண்மையில் நியுயார்க்கில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் அமைப்புக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அவர் கூறுகையில், வாஜ்பாய், பாகிஸ்தானுக்கு எதிராகப் பேசி வந்தாலும், அவரது மனதில் காஷ்மீர் பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்கும்எண்ணம் இருக்கிறது.
அவர் சமீபத்தில் பாகிஸ்தானில் லாகூருக்கு பஸ் போக்குவரத்தை ஏற்படுத்தி பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவைவலுப்படுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையேயான தோழமை உணர்வை வலுப்படுத்தியுள்ளார். இதை அவரது நல்லெண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றுபத்திரிக்கைகளில் செய்திகள் பிரசுரமாகியுள்ளன. இதனால் காஷ்மீர் பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காசாபிளான்காவில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது இந்தியா நடந்து கொண்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆயினும் ஏதோ சில காரணங்களால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதிகள் போர்நிறுத்தம் அறிவித்து, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தனர். ஆனால்,பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ற ஹிஸ்புல்லின் நிர்பந்தத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததையடுத்து அப்பேச்சுவார்த்தைகைவிடப்பட்டது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் கருத்துத் தெரிவிக்கையில் கயூமின் கருத்துக்கள், இந்தியாவுக்கு எதிராக இருந்தாலும், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வகையில் உள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications