நெல்லையில் கடும் மழை: 4 பேர் பலி
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. மின்னல் தாக்கி நான்கு பேர்உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சிலபகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.
கூடங்குளம் அருகே உள்ள கே.சி.பழவூரில் இடி தாக்கியதில் தோட்டத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த சுந்தர்ராஜ் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி.இவரது வயலில் மனைவி குருவம்மாள், மகள் மாடத்தி (23) ஆகியோர் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் மாடத்தி அதே இடத்தில்இறந்தார். மற்ற இருவரும் காயமடைந்தனர்.
பணகுடி அருகே தண்டையார் குளத்தை சேர்ந்த கந்தையா தேவர் (50), நடராஜன்ஆகிய இருவரும் தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கிஇறந்தனர்.
இடி மின்னல் காரணமாக இம்மாவட்டத்தில் வடக்கன்குளம், ஆவரைகுளம் பகுதியில்வீடுகளில் உள்ள டெலிவிஷன்கள் சேதம் அடைந்துள்ளன. டெலிபோன்களும்இயங்கவில்லை.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications