அதலெடிக்ஸ்: 5000 மீட்டர் ஓட்டத்தில் ருமேனியா வீராங்கனை ஒலிம்பிக் சாதனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் ருமேனியாவீராங்கனை காப்ரியலா ஸாபோ ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கம்வென்றார்.
திங்கள்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் பந்தைய தூரத்தை 14 நிமிடம்40.79 விநாடிகளில் ஓடிக் கடந்து தங்கம் வென்றார்.
பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டம், 1996-ம் ஆண்டு அட்லாண்டாஒலிம்பிக்கில்தான் முதன்முதலாக சேர்க்கப்பட்டது. அப்போது நடந்த போட்டியில் சீனவீராங்கனை பந்தைய தூரத்தை 14 நிமிடம் 59.88 விநாடிகளில் ஓடி சாதனைபடைத்தார்.
சீன வீராங்கனையின் அச் சாதனையை ருமேனிய வீராங்கனை காப்ரியலா ஸாபோமுறியடித்துள்ளார்.
இப் போட்டியில் அயர்லாந்து வீராங்கனை சோனியா ஓசலிவன் வெள்ளிப் பதக்கமும்,எத்தியோப்பிய வீராங்கனை கெடே வாமி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.












Click it and Unblock the Notifications