இந்தியா-ஈராக் உறவு வலுப்பட சதாம் ஹுசைன் அழைப்பு
துபாய்:
இந்தியா, ஈராக் நாடுகளின் இருதரப்பு உறவு வலுப்பட இரு நாடுகளும் இன்னும் அதிகமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஈராக் அதிபர்சதாம் ஹூசேன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பிரதமர் வாஜ்பாயின் சார்பில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அஜித் குமார் பாஞ்சா ஈராக் சென்றுள்ளார். அவருடன் வர்த்தகர்கள் மற்றும்அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றும் சென்றுள்ளது.
ஈராக் சென்றுள்ள அஜித் குமார் பாஞ்சா ஞாயிற்றுக்கிழமை மாலை அதிபர் சதாம் ஹூசேனை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் வாஜ்பாய்,சதாமிற்காகக் கொடுத்தனுப்பிய கடிதத்தை கொடுத்தார்.
வாஜ்பாய் தனது கடிதத்தில், இந்தியா, ஈராக் ஆகிய இருநாடுகளும் அனைத்துத் துறையிலும் இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக கலாச்சாரவளர்ச்சிக்காக இரு நாட்டின் பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை பரிமாறிக் கொள்வது நல்லது என்று குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தைப் படித்த சதாம் ஹூசேன் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். பின்னர் கல்வித்துறையில் மட்டுமின்றி, மருத்துவத்துறையிலும்,விவசாயத்துறையிலும் இரு நாட்டு வல்லுநர்களும் பரிமாறிக் கொள்ளப்படுவது நல்லது. அப்போதுதான் இரு நாட்டு உறவும் வலுப்படும் என்றார்.
மேலும், மருத்துவத்துறையில் இருநாட்டு வல்லுநர்களும் சந்தித்துப் பேசுவதால், சமீபத்திய கண்டுபிடிப்புக்கள், வளர்ச்சிகள் போன்றவை குறித்து எளிதில்பரிமாறிக் கொள்ள முடியும்.
ஈராக் துணை அதிபர் டாகா யாசின் அக்டோபர் மாதம் டெல்லி செல்கிறார். அப்போது இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்துஆலோசிக்கப்படும் என்றார் சதாம் ஹூசேன்.
இந்த சந்திப்பின்போது, ஈராக் துணை பிரதமர் தாரிக் அஸூம் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், அதிபர் சதாம் ஹூசேனும், இந்திய அமைச்சர் அஜித்குமார் பாஞ்சாவுக்குமிடையே நடந்த சந்திப்பு மிகவும் முக்கியமானது. இந்த சந்திப்பு மிகவும் தோழமை உணர்வுடன் நடந்தது என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications