கனவு காணுங்கள்..அப்துல்கலாம் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

உங்கள் குறிக்கோள்கள் குறித்து கனவுகள் காணுங்கள், அதனை எண்ணங்களாக ஆக்கி செயல் வடிவம் கொடுத்தால், விரும்பும்துறையில் வெற்றி பெறலாம் என பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் விஞ்ஞானி அப்துல்கலாம் கூறினார்.

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் திங்கள்கிழமை தனது சொந்த ஊரானராமநாதபுரம் வந்தார். அவரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிபாரதி, மாவட்ட எஸ்.பி சேஷாயி ஆகியோர்வரவேற்றனர்.

அப்துல்கலாமிடம் மாவட்ட ஆட்சித்தலைவர், சேது சத்திர திட்டம், ராமேஸ்வரம் - மதுரை அகல ரயில்பாதை திட்டம்,ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவை குறித்து விளக்கினார். இத்திட்டங்கள் செயல்வடிவம் பெற தான்உதவுவதாக மாவட்ட ஆட்சியர் மணிபாரதியிடம் அப்துல்கலாம் உறுதியளித்தார்.

பின்னர் அப்துல்கலாமை அவர் படித்த சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் செல்வம் பென்னட் தேவதாஸ்சந்தித்தார். அவரிடம், அந்தப் பள்ளி மாணவர்களை வரும் நவம்பர் மாதத்தில் வந்து சந்திப்பதாக கலாம் கூறினார்.

பின்னர் மாணவர்களுக்கு தனது அறிவுரையாக கூறிய செய்தியில், மாணவர்கள் தங்கள் குறிக்கோள் குறித்து முதலில் கனவுகாணுங்கள், பின்னர் அந்த கனவுகளை எண்ணங்களாக ஆக்கி அவற்றை செயல்படுத்தமுனையுங்கள். அப்பொழுது தான் தாங்கள்நினைத்த இலக்கை மாணவர்கள் அடையமுடியும் என்றார்.

பின்னர் அவர் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+