இன்று வீரப்பன்- கோபால் சந்திப்பு?
ஈரோடு:
அரசுத்தூதர் கோபால் செவ்வாய்க்கிழமை வீரப்பனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பன், நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்கள் 3 பேரையும் கடத்தி ஏறக்குறைய 59 நாட்களாகிவிட்டன.
வீரப்பனின் நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்து இருப்பதால் ராஜ்குமார் விடுவிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடிகர் ராஜ்குமாரை மீட்டு வருவதற்காக அரசுத்தூதர் கோபால் 4 வது முறையாக சத்தியமங்கலம்காட்டுக்குச் சென்றுள்ளார்.
கடந்த 5 நாட்களாக சத்தியமங்கலம் காட்டு எல்லையில் காத்திருந்தார் கோபால். இதற்கிடையே திங்கள்கிழமை காலை வீரப்பனிடமிருந்து,கோபாலுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் கூறுகையில், வீரப்பனின் தூதுவர் தன்னைத் தொடர்பு கொண்டு பேசி விட்டதாகவும்,வீரப்பனை சந்திப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை காட்டுக்குச் செல்லவிருப்பதாகவும் கோபால் என்னைத் தொடர்பு கொண்டு கூறினார்என்றார்.
இதனால் எப்படியும் செவ்வாய்க்கிழமை மாலைக்குள் வீரப்பனைக், கோபால் சந்தித்து விடுவார் என்று தெரிகிறது. வீரப்பன் மனம் இரங்கிராஜ்குமார் உள்பட 4 பணய கைதிகளையும் கோபாலுடன் அனுப்பி வைப்பானா அல்லது தனது நிபந்தனையில் பிடிவாதமாக இருப்பானா என்பது இன்னும்ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications