ஹாக்கி: பறிபோனது பதக்கக் கனவு - போலந்துடன் இந்தியா டிரா
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவு பறிபோனது.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பி பிரிவு ஆட்டத்தில் இந்தியா தனது கடைசிஆட்டத்தில் போலந்து அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.
இதையடுத்து அரையிறுதியில் நுழையும் வாய்ப்பை இந்தியா இழந்தது. இப்போது பிபிரிவிலிருந்து ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய அணிகளும், ஏ பிரிவிலிருந்துபாகிஸ்தான், ஹாலந்து ஆகிய அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
செவ்வாய்க்கிழமை போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்அல்லது 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்யவேண்டும் என்ற நிலையில் இந்தியாவிளையாடியது.
முதல் பாதி ஆட்டம் இரு அணிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் முடிந்தது. இருஅணியினரும் அவ்வளவு ஈடுபாட்டுடன் விளையாடவில்லை. ஆனால், இரண்டாவதுபாதி ஆட்டத்தில் இந்தியா தனது அதிரடி ஆட்டத்தைக் கையாண்டது.
அதன் பலனாகக் கிடைத்த ஒரு பெனால்டி கார்னரை இந்திய வீரர் திலீப் டிர்க்கிகோலாக மாற்றி இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். அதன்பிறகும் இந்தியாவுக்குகோல் போட பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அவை யாவும்வீணடிக்கப்பட்டன.
ஆட்டத்தை எப்படியாவது டிரா செய்யவேண்டும் என்று போலந்து வீரர்கள் ஆடினர்.ஆட்டம் முடிய 4 நிமிடங்கள் இருந்தபோது போலந்து ஒரு போல் டிரா செய்தது.ஆனால் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் மேலும் கோல் போட்டு வெற்றி பெற இருஅணிகளாலும் முடியவில்லை.
இதையடுத்து அந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.புள்ளிகள் பட்டியலில் இந்தியா 8 புள்ளிகளுடன் 3-ம் இடத்தைப் பெற்றது.இதையடுத்து இந்தியாவைப் போலவே 8 புள்ளிகளைப் பெற்ற தென் கொரியா கோல்வித்தியாசத்தில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இந்தியாஇழந்தது. இந்தியா அடுத்து 5 முதல் 8 இடங்களுக்கான ஆட்டங்களில்பங்கேற்கவேண்டும்.
1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா 8-வதுஇடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டங்களில் ஏ பிரிவில் முதலிடம்பெற்ற பாகிஸ்தானுடன் பி பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற தென் கொரியாவும், ஏபிரிவில் இரண்டாம் இடம் பெற்ற ஹாலந்து, பி பிரிவில் முதலிடம் பெற்றஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளன.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications