ஹூரியத் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய நிபுணர் குழு சந்திப்பு
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்காக ஐரோப்பிய நிபுணர் குழு காஷ்மீர் வந்துள்ளது. அவர்கள் ஹூரியத் தலைவர்களை திங்கள்கிழமைமாலை சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பு சுமார் 90 நிமிடம் நடந்தது. ஐரோப்பிய நிபுணர் குழுவைச் சேர்ந்தவர்கள், ஹூரியத் கமிட்டி தலைவர் பேராசிரியர் அப்துல் கானி பட்டைச் சந்தித்துப்பேசினர்.
முன்னதாக, மோன்டே பெர்னாடு தலைமையில் வந்த அந்த நிபுணர் குழு, காஷ்மீர் டி.ஜி.பி. மற்றும் அகில இந்திய காஷ்மீர் மக்கள் முன்னணிக் கழகத்தின்தலைவர் பாசல் ஹக் குவாரேஷி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
இதில் பாசல் ஹக், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் இந்தியாவுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனைத்துமுயற்சிகளையும் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்பதும் நினைவிருக்கலாம்.
மேலும் இந்தச் சந்திப்புக் குறித்த பிற தகவல்கள் எதுவும் தெரியவில்லை. காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையிலும், அங்கு நிலவி வரும்பிரச்சனைகளை ஆராயும் நோக்கிலும் இக்குழு காஷ்மீர் வந்திருக்கிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications