நானும் காட்டுக்குள் வருவேன்...பர்வதம்மா
பெங்களூர்:
நானும் காட்டுக்கு வந்துவிடுகிறேன் என பர்வதம்மா ராஜ்குமார் கூறினார்.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு ஏறக்குறைய 58 நாட்களாகியும் வீரப்பன் அவரை விடுவிப்பதாக இல்லை.
அவரை விரைவில் விடுவிக்குமாறும், ராஜ்குமாருக்கு ஆறுதல் கூறியும் அவரது மனைவி பர்வதம்மா இதுவரை 8 முறை வானொலியில் பேசியுள்ளார்.
இது கோவை, பெங்களூர், மைசூர் உள்பட சில வானொலி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பப்பட்டது. ஆனால் எந்தப் பயனும் இல்லை.
இதற்கிடையே பர்வதம்மா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூர் மல்லய்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரதுமகன்கள் காட்டுச் செல்லத் தயார் என்று கூறியதையடுத்து பர்வதம்மாவும் காட்டுக்குச் செல்ல தயார் என்று கூறியுள்ளார்.
திங்கள்கிழமை 9 வது முறையாக அவர் பேசிய செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
வானொலியில் அவர் பேசியதாவது:
நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளேன். உங்களுக்கு முதுகுவலி, காய்ச்சல் என்று பத்திரிக்கைகளில் போட்டிருக்கிறார்கள். எது உண்மை, எது பொய்என்று எனக்குத் தெரியாது.
உங்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். கோபாலிடம் பிரசாதம், மருந்து, மாத்திரைகளைக்கொடுத்தனுப்பியுள்ளேன். அதை வாங்கிக் கொள்ளுங்கள்.
உங்களைப் பிரிந்து 57 நாட்களாகிவிட்டன. நான் உங்களுக்காக இதுவரை கண்ணீர் விடாமல் இருந்தேன். இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது. நானும்காட்டுக்கு வந்துவிடுகிறேன்.
பெங்களூரிலிருந்து காஜனூருக்கு வந்து அங்கிருந்து காட்டுக்கு வந்து விடுகிறேன். கோவிந்த் தம்பி நீ எப்படி இருக்கிறாய்? மருந்து சாப்பிடுகிறாயா?மாமாவைக் கவனித்துக் கொள்.
அவரையும் மருந்து சாப்பிட்டாயா? நாகப்பா, நாகேஷ் ஆகியோரையும் கேட்டதாகச் சொல் என்று பேசியுள்ளார் பர்வதம்மா.
மேலும் வீரப்பனுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், வீரப்பா நாங்கள் என்ன பாவம் செய்தோம்? யாரையோ பழிவாங்க எங்கள் குடும்பத்தைஏன் கொடுமைப்படுத்துகிறாய்? உன் தங்கை என்று நினைத்து, என் கணவரையும், மூன்று பேரையும் விடுவிக்க வேண்டும்.
நாகப்பாவுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அவரது மனைவி கர்ப்பிணி. இதை அறிந்த பிறகாவது நீங்கள் 4 பேரையும் விட்டுவிட வேண்டும் என்றுவேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications