ருமேனிய வீராங்கனையின் தங்கப் பதக்கத்துக்கு வேட்டு வைத்த மாத்திரை
சிட்னி:
ஜலதோஷம் சரியாவதற்காக தின்ற இரு மாத்திரைகள் தனது தங்கப் பதக்கத்துக்குவேட்டு வைக்கும் என்று ருமேனிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆன்ட்ரியா ராடுகான்நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
ஜிம்னாஸ்டிக் போட்டியில் பெண்களுக்கான ஆல்-ரவுன்ட் சுற்றில் ராடுகான தங்கப்பதக்கம் வென்றார். அப்போட்டியின் முடிவில் நடத்தப்பட்ட மருத்துவப்பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியிருப்பதுதெரியவந்தது.
இதையடுத்து அப் போட்டியில் அவர் வென்ற தங்கப் பதக்கத்தை சர்வதேச ஒலிம்பிக்கமிட்டி பறித்துவிட்டது.
உண்மையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை ராடுகான் பயன்படுத்தவில்லை.ஆல்-ரவுன்ட் சுற்றில் கலந்து கொள்வதற்கு முன் தனக்கு இருந்த ஜலதோஷம்சரியாவதற்காக இரு மாத்திரைகளை அவர் தின்றார்.
அந்த மாத்திரைகளில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகள்பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனால், மருத்துவப் பரிசோதனையில் ராடுகான் சிக்கிக்கொண்டார்.
ராடுகானுக்கு அந்த மாத்திரைகளை அளித்த ருமேனிய அணியின் மருத்துவரும் சிட்னிஒலிம்பிக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெறும்ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றுஒலிம்பிக் கமிட்டியின் இயக்குநர் ஜெனர் பிரான்கோயிஸ் கர்ரார்டு தெரிவித்தார்.
ஆல்-ரவுன்ட் சுற்றில் ராடுகான் வென்ற தங்கப் பதக்கம்தான் பறிக்கப்பட்டதே தவிர,அணிப் பிரிவில் வென்ற தங்கமும், வால்ட் பிரிவில் வென்ற வெள்ளிப் பதக்கமும்பறிக்கப்படாது என்றார் கர்ரார்டு.
சிட்னி ஒலிம்பிக்கில் இதுவரை நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ராடுகானுடன் சேர்த்து 5 பேர் பிடிபட்டுள்ளனர்.
இதில் 3 பேர் பல்கேரிய நாட்டையும் மற்றொருவர் லாட்வியா நாட்டையும்சேர்ந்தவர்கள். பல்கேரியாவைச் சேர்ந்த 3 பேரும் பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள்.
அவர்கள் வென்ற பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications