சதாமுக்கு புற்றுநோய் தீவிரம்: ரஷ்ய, பிரான்ஸ் டாக்டர்கள் விரைந்தனர்
துபாய்:
புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் இராக் அதிபர் சதாம் உசேனில் உடல் நிலை மோசமடைந்தத அடுத்து அவருக்கு சிகிச்சைஅளிக்க ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
2 சிறப்பு விமானங்களில் இவர்கள் இராக் அழைத்து வரப்பட்டனர். இச் செய்தியை சவுதி அரேபியாவின் அல்-ஹயாத் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் சதாம் உசேனின் உடல் நிலை மோசமடைந்தது. அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது. இதையடுத்துஇந்த இரு நாடுகளில் இருந்தும் சிறப்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.
மாஸ்கோவிலிந்து புறப்பட்ட ஒரு விமானம் நேரடியாக சனிக்கிழமை பாக்தாத் விமான நிலையம் வந்திறங்கியது. பிரான்ஸ்விமானம் வெள்ளிக்கிழமை பாக்தாத் வந்தது. அமெரிக்கா, பிரிட்டனின் கடும் எதிர்ப்பை மீறி பிரான்ஸ் தனது மருத்துவக்குழுவை இராக் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சதாம் உசேன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 1998ம் ஆண்டில் அமெரிக்க,பிரிட்டிஷ் விமானங்கள் குண்டுவீச்சில் இடிந்து விழுந்த அதிபரின் அரண்மனை திறப்பு விழா கடந்த வாரம் நடந்தது. அதிலும்சதாம் கலந்து கொண்டார். அப்போது அவர் நலமுடன் தான் காணப்பட்டார்.
இதன் பின்னர் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
சதாமுக்கு புற்றுநோய் தாக்குதல் இருப்பதை அமெரிக்கா 3 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்தது. ஆனால், இதை இராக் அதிபரும்அதிகாரிகளும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications