தோழியுடன் ஜெ. மீண்டும் கோவில் வலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அனைத்து பாவங்களையும் போக்கி காக்க வல்ல திருபுவனம் சரபேஸ்வரர் ஆலயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறப்பு பூஜை செய்தார். தோழிசசிகலாவுடன் சாமியை தரிசித்தார்.

தஞ்சையில் தங்கியுள்ள ஜெயலலிதா செவ்வாய் கிழமை கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனம் சரபேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார்.

அவர் வருவதற்கு முன்பு காலை 8 மணியளவில் அந்த ஆலயத்தில் உள்ள கம்பரேஸ்வரர் சுவாமி, அறம் வளர்த்த நாயகியம்மன், சரபேஸ்வரர் ஆகியசுவாமிகளுக்கு சங்கல்பம் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.

ஜெயலலிதா வந்ததும் கோபுரவாசலில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தர்மபுரம் மடம் சார்பில் நிர்வாகிகள்வரவேற்றனர்.

சரபேஸ்வரர் சன்னதியில் 11 நெய் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தார். மகா அபிஷேகம் செய்து அர்ச்சனை நடத்தப்பட்டு அவருக்கு பிரசாதம்வழங்கப்பட்டது.

பின்னர் உற்சவ மூர்த்தியை தரிசித்து விட்டு பகல் 1 மணிக்கு ஆலயத்தை விட்டு வெளியே வந்தார். கூடியிருந்த அதிமுகவினர் வழக்கம்போல் "புரட்சித்தலைவிவாழ்க என்று கோஷமிட்டனர். அவர்களை பார்த்து கையசைத்து விட்டு காரில் ஏறிச் சென்று விட்டார் தலைவி.

கொடிய சத்ருக்களை அழித்து, தீராத இன்னல்களை தீர்த்து சரணடைந்தவர்களுக்கு அபாயம் அளிக்கும் தெய்வம் ஸ்ரீசரபேஸ்வரர். அதர்வண வேதத்தில்கூறப்பட்டுள்ள சரப மந்திரம், எல்லா பாவங்களையும் போக்கி காக்க வல்லது.

இவரை வழிபடுவதால் பேராபத்து, பரிகாரம் காண முடியாத துன்பம், வைத்தியவர்கள் கைவிட்ட வியாதிகள், துன்பம் தரும் எதிரிகள் இவைகளில்இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று வியாசர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+