கருணாநிதிக்கு எங்கள் மீது பிரியம் அதிகம் .. மூப்பனார்
கோவை:
கருணாநிதிக்கு எங்கள் மீது பிரியம் அதிகம் என கோவையில் மூப்பனார் கூறினார்.
திருப்பூரில் நடக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ள மூப்பனார் விமானம் மூலம் கோவை வந்தார்.விமான நிலையத்தில் நிருபர்களுக்கு மூப்பனார் பேட்டி அளித்தார்.
சிறை நிரப்பும் போராட்டத்தில், 6 மாதம் சிறைத் தண்டனை என கருணாநிதி கூறியுள்ளரே என நிருபர்கள் கேட்டபோது, "ஆறுமாதம் என்ன, ஆறு ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறை செல்லத் தாயர் என்றார்.
கே: எப்போதும் இல்லாத நடவடிக்கை இப்போது ஏன்?
ப: எங்கள் மீது கருணாநிதிக்கு பிரியம் அதிகரித்துள்ளது.
கே: ஈரோட்டில் தி.மு.க.,வினர், த.மா.கவினர் குறித்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனரே?
ப: இது கீழ்த்தரமான விளம்பரம்.
கே: அரசியலில் உங்களைப் பார்த்து கருணாநிதி பயப்படுகிறாரா?
ப: இல்லை, இல்லை, கருணாநிதி மிகவும் தைரியசாலி.
கே: த.மா.க.,வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கருணாநிதி கூறியுள்ளரே?
ப: இதனை கருணாநிதியிடம் தான் கேட்க வேண்டும் .
கே: ஜோதிபாசு அரசைக் கலைக்க வேண்டும் என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறதே?
ப: ஜோதிபாசு அரசியலில் அனுபவம் நிறைந்த மனிதர். அவருக்கு ஆட்சி நடத்த
தெரியவில்லை எனக் கூறுவது தவறு. மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதே. 356 வது பிகிவு நீடிக்க வேண்டும். எப்போதுபயன்படுத்த வேண்டுமோ, அப்போது பயன்படுத்த வேண்டும்.
கே:: கூட்டணி ஆட்சி பற்றி?
ப: தேர்தல் வரட்டும் யோசிப்போம் என்றார் மூப்பனார்.
சென்னையில் இருந்து கோவை வந்த விமானத்தில், மூப்பனாருடன், காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் ஒரே விமானத்தில்வந்திறங்கினர். விமானத்தில் இருவரும் அரசியல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications