சென்னை ஹைகோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 நீதிபதிகள் புதன்கிழமை பதவியேற்கின்றனர். தலைமை நீதிபதி எஸ்.கே.ஜெயின் இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
புதன்கிழமை பதவியேற்கவுள்ள இந்த நான்கு பேரும் மாவட்ட நீதிபதிகள்.
எம்.சொக்கலிங்கம் (51): 1974 ல் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 1987 ம் ஆண்டு மாவட்ட நீதிபதி ஆனார். திருச்சி, சேலம்ஆகிய இடங்களில் பணியாற்றினார். 1998 ம் ஆண்டு கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஏ.கே.ராஜன் (57): சென்னை சட்டக்கல்லூரியில் 1976 முதல் விரிவுரையாளராகப் பணியாற்றிய அவர் 1987 ல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, சேலம் ஆகிய இடங்களில் பணியாற்றிய இவர் 1996 ல் தமிழக அரசின் சட்டத்துறை செயலாளராகப்பணியாற்றினார். பின்னர் சேலம் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சி.நாகப்பா(49): 1987 ல் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்காணிப்புத்துறை சிறப்பு அதிகாரியாகநியமிக்கப்பட்டார். பின்னர் மாநில போக்குவரத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாய தலைவராக நியமிக்கப்பட்டார்.
மலை சுப்பிரமணியன் (59): 1965 முதல் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர் 1987 ல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.1996 ல் சென்னைஉயர்நீதிமன்றப் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
1999ல் விற்பனை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2000 மாவது ஆண்டு மே மாதம் செங்கல்பட்டு மாவட்டமுதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியில் அட்வகேட் ஜெனரல் கே.வி.வெங்கடபதி மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் புதிய நீதிபதிகளைவரவேற்றுப் பேசுவார்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications