நஷ்ட ஈடு வேண்டும் .. ஐ.ஏ.எஸ். அதிகாரியால் பாதிக்கப்பட்ட இளைஞர்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

ஐஏஎஸ் அதிகாரி மகளைக் காதலித்ததால் மொட்டையடிக்கப்பட்ட வாலிபர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரத் தீர்மானத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் குருந்தன் குளத்தைச் சேர்ந்தவர் முருகன். வயது 26. தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கலைவாணன்மகளைக் காதலித்தார்.

தன் மகளின் காதல் விஷயம் தெரிந்தவுடன் ஐ.ஏ.எஸ்.அதிகாரி, முருகனை மொட்டையடித்து ஏர்வாடி மனநோய் காப்பகத்தில் சேர்த்துவிட்டு விட்டு எதுவும்தெரியாததுபோல் இருந்து விட்டார்.

இது தொடர்பாக முருகனின் தந்தை வீரணன் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து மதுரை சிப்காட் போலீஸார் ஐ.ஏ.எஸ்.அதிகாரி மீது 7 பிரிவுகளில்வழக்குத் தொடர்ந்தனர்.

அதன்பிறகு முருகன், அவரது அண்ணன் தனுஷ்கோடி, தந்தை வீரணன் ஆகியோர் சிவகங்கையிலுள்ள மாவட்ட இ.கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு வந்தனர். அங்குமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நடந்த சம்பவத்திற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். என் அப்பா இதுகுறித்துப் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதற்கு சட்டப்படி நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

நடந்த சம்பவத்தால் நான் உடலாலும், உள்ளத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடருவேன் என்றார் முருகன்.

அவரது அண்ணன் தனுஷ்கோடி கூறியதாவது:

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சென்னையிலுள்ள எங்களுக்கு அடிக்கடி மிரட்டலும், தொல்லைகளும் வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு எனதுதம்பிக்கும், எங்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+