9ம் தேதிக்குள் திரும்ப வருவேன்: கேசட்டில் ராஜ்குமார்
பெங்களூர்:
அக்டோபர் 9ம் தேதிக்குள் நான் திரும்பி வந்துவிடுவேன் என ராஜ்குமார் கேசட்டில் கூறியுள்ளார்.இத் தகவலை கர்நாடக காவல்துறை டி.ஜி.பி. தினகர்தெரிவித்தார்.
தசரா நேரத்தில் பந்த் நடத்த வேண்டாம் என்றும் ராஜ்குமார் கூறியுள்ளார். காட்டிலிருந்து நடிகர் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்து பேசிய கேசட் சென்னைக்குபுதன்கிழமை வந்துள்ளது.
ராஜ்குமார் எப்போது வருவார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நக்கீரன் நிருபர் சுப்பு மூலம் புதன்கிழமை காலைசென்னை வந்து சேர்ந்துள்ளது ஒரு கேசட்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் அரசுத்தூதர் கோபால், தனது நிருபர்களுடன் வீரப்பனைச் சந்தித்தார். பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே, தயாராக வைத்திருந்தகேஸட்டைக் கொடுத்தாராம் வீரப்பன். அந்தக் கேஸட்டில் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசியுள்ளார்.அது குறித்த விவரமாவது:
தசரா திருவிழா நடந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் பந்த் நடத்துவது பொதுமக்களுக்கு ஆபத்தானது. பந்த் நடத்தாதீர்கள். அந்த சாமூண்டிஸ்வரி அருளால் நான்விரைவில் காட்டிலிருந்து வருவேன்.
மக்களுக்கு யாரும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பந்த் போன்ற எந்த நடவடிக்கையும் இப்போது தேவையில்லை. தயவுசெய்து பந்த்தைக் கைவிடுங்கள்.நான் இங்கே நன்றாக இருக்கிறேன். பர்வதம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார் ராஜ்குமார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications