ஸ்விஸ் ஹெலிகாப்டர் விபத்தில் 8 இந்தியர்கள் பலி
நியூயார்க்:
சுவிட்ஸர்லாந்தின் கான்டன் வாலைஸ் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய இரண்டு ஹெலிகாப்படர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மோதிவிபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த 8 இந்தியர்களும், பைலடடுகளில் ஒருவரும் இறந்தனர்.
இந்த விபத்து சியான் நகரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பியோசான் என்ற இடத்தில் நடந்தது.
சுற்றுலா வந்திருந்த 60 இந்தியர்கள் இயற்கைக் காட்சிகளை பார்வையிடும் 5 நிமிட விமான பயணத்திற்காக காத்திருந்த போது இந்த கோர விபத்துஏற்படட்து. இதுவரை நடந்த விபத்துக்களிலேயே இதுதான் மோசமானது என சுவிஸ் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதில் பயணம் செய்த 8 இந்தியர்களும் பைலட்டுகளில் ஒருவரும் இறந்தனர். இதைத் தவிர மற்றொரு பெல் ஜெட் ரேஞ்சரில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருசுற்றுலாப் பயணியும் பலியானார். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவருடன் பயணம் செய்த மூன்று சுற்றூலாப் பயணிகள்காயமடைந்தனர்.
ஹெலிகாப்டர் விசிறிகள், தரையிறங்கும் போது மோதிக் கொண்டதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கால்பந்தாட்ட மைதானத்தில் விழுந்தது எனவிபத்தைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
போலீஸ் விபத்து நடந்த இடத்தை சுற்றி இருக்கின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த விபத்து நடந்த போது வானிலை சீராகவே இருந்தது. விபத்துக்கு மனித தவறே காரணம் என கூறப்படுகிறது.
இந்த மாதம் 5-ம் தேதி இதே போன்ற ஹெலிகாப்டர் கான் வாடில் விபத்துக்குள்ளானது. அதில் பைலட் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications