எதிரிகள் சரணடைந்தால் பொது மன்னிப்பு .. தலிபான் தலைவர்
இஸ்லமாபாத்:
ஆப்கானிஸ்தானின் வட கிழக்குப் பகுதியில் அரசை எதிர்த்து போரடிவருபவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தால் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும்என தலிபான் தலைவர் முல்லா முகமது ஒமர் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் வட கிழக்குப்பகுதியான தக்கார் மற்றும் குண்டோஸ் பகுதியில் தலிபான் படையினரின் கை ஓங்கியிருப்பதைத் தொடர்ந்து இந்த அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.
முல்லா ஒமர் விடுத்துள்ள அறிவிப்பில், எதிர்தரப்பு வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட வேண்டும். அவர்கள் தங்கள் வன்முறையைக் கைவிட்டுவந்தால் அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
அநதப் பகுதியை விட்டு காலி செய்து சென்றவர்களை மீண்டும் அந்த இடங்களுக்கு திரும்பி வருமாறும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும்ஒமர் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பகுதியான தக்காரில் பொதுமக்களின் உடைமைகளையும் உயிரையும் பாதுகாக்கும்படி தலிபான் படையினரை ஓமர் கேட்டுக் கொண்டுள்ளார்என தலிபானுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் சலாம் ஜயீப் கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஐக்கியநாடுகளைச் சேர்ந்த உலக உணவுத்திட்ட அமைப்பினர் தக்கார் பகுதியில் நடந்த வன்முறை காரணமாக 70,000 பேர் அந்தஇடத்தைவிட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளனர். ஆனால் முன்னர் கிடைத்த தகவல் 1 லட்சம் பேர் தக்காரிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கிறது.
சீரமைப்புக்கு உதவ தலிபான் கோரிக்கை
இதற்கிடையே, ஆப்கானின் உண்மை நிலையை உணர்ந்து, போரால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டை சீரமைக்க உதவுமாறு உலக நாடுகளை தலிபான் அரசுகேட்டுக் கொண்டுள்ளது.
தலிபானின் வெளியுறவுத்துறை அமைச்சர் வகில் அகமது முட்டா வக்கீல் அளித்த பேட்டி ஒன்றில், ஆப்கான் அண்டை நாடுகளுடன் என்றும் நட்புறவையேவிரும்புகிறது.
தலிபான் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் தயாராக உள்ளது. அவர்கள் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். அல்லது அவர்கள் அழைத்தால்அவர்கள் நாடுகளுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான், ரஷ்ய நாடுகள் தங்கள் நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகளுக்கு ஆப்கானைகுறை கூறுவது தவறு.
சீனாவுடன் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. சீனாவுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள ஆப்கான் விரும்புகிறது.
ஈரானைப் பொறுத்தவரையில் எங்கள் தரப்பிலிருந்து எந்த விதமான பிரச்சனையும் இல்லை. பிரான்சுடனான உறவுகள் பலப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் எங்கள் பிரதிநிதிகள் பிரான்சு நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்பதையும் எங்களைப்பற்றி பரப்பப்படும் தவறான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் அவர்களுக்கு எடுத்துக் கூறியுளளோம் என கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications