டென்னிஸ்:பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் வீனஸ் வில்லியம்ஸ்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ்வில்லியம்ஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர், ரஷ்யாவின் எலீனாடெமென்டீவாவை 6-2, 6-4 என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்தார்.
ஏற்கெனவே, அமெரிக்காவின் மோனிகா செலஸ், ஆஸ்திரேலியாவின் ஜெலீனாடோகிக்கைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
வீனஸ் வில்லியம்ஸுக்கு கிடைத்த இந்த வெற்றி அவருக்குக் கிடைத்துள்ள 32-வதுதொடர் வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி ஒலிம்பிக்கில் மேலும் ஒரு தங்கத்தை வெல்லும் நிலையில் வீனஸ் வில்லியம்ஸ்உள்ளார்.
அவரும் அவரது சகோதரி செரீனா வில்லியம்ஸும் பெண்களுக்கான இரட்டையர்பிரிவு இறுதி ஆட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications