தமிழகம் முழுவதும் 1,25,000 த.மா.காவினர் கைது
சென்னை:
மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ்சார்பில் புதன் கிழமை நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் ஒன்றேகால் லட்சம்தமாகாவினர் கைதாகியுள்ளனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
காரைக்குடியில் ப.சிதம்பரம், செனையில் ஜெயந்தி நடராஜன்,எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், செல்லக்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டபோதுபோலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளைமுன் வைத்து மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை இக்கட்சி அறிவித்தது.
அதன்படி புதன் கிழமை காலை 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள மத்தியமாநில அரசு அலுவலகங்கள் முன்பு த.மா.கா.வினர் மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
சென்னையில் 14 சட்டமன்றத் தொகுதிகளிலும் த.மா.கா. சார்பில் மறியல் போராட்டம்நடைபெற்றது. மழை காரணமாக சில இடங்களில் தாமதமாக துவங்கிய இந்தபோராட்டத்தில் த.மா.கா.வினர் திரளாக கலந்து கொண்டனர்.
சென்னை மயிலாப்பூரில் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தலைமையிலும்,அண்ணா நகரில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தலைமையிலும், கோடம்பாக்கத்தில்டாக்டர் செல்லக்குமார் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது.
அதேபோல் காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலும்,நெல்லையில் பீட்டர் அல்போன்ஸ் எம்.பி. தலைமையிலும், கன்னியாகுமரியில்முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையிலும் மறியல் போராட்டம்நடந்தது.
தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும்போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.அவர்கள் மீது தடையை மீறியதாக வழக்குத் தொடர்ந்து சிறையில்அடைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையேல் மாலையில்அவர்கள் விடுவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
தமிழகம் முழுவதும் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம்தமாகாவினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்புதன் கிழமை காலை நிருபர்களை சந்தித்த தமாகா செய்தித் தொடர்பாளர்ஞானதேசிகன் தெரிவித்தார்.
தமாகா அறிவித்த இந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கட்சித் தலைவர் மூப்பனார்கலந்து கொள்ளவில்லை. அவரது சகோதரர் ஜி.ஆர்.மூப்பனார் தஞ்சையில் நடந்தபோராட்டத்தில் கலந்து கொண்டார்.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட 6ஆயிரம் தமிழ் மாநில காங்கிரஸ்தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில், குறைந்த அளவு தொண்டர்களே கைது செய்யப்பட்டனர். எதிர்பார்த்த அளவிற்கு கோவை,நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில்பங்கேற்கவில்லை.
கோவையில் நடந்த போராட்டத்தில் 450 பெண்கள் உட்பட இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் ஒரு பிரிவினருக்கு த.மா.கா.,எம்.எல்,ஏ.,வும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான வி.கே லட்சுமணன்தலைமை வகித்தார். கோவை மேற்குப் பகுதிக்கு த.மா.க., செயலர் கார்வேந்தன் தலைமை வகித்தார்.
கோவையில், 3 ஆயிரத்து 500 பேரும், புறநகர் பகுதியில் ஆயிரத்து 1500 பேருமாக, 5 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கோவையில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில், 200 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் 135 பேரும், குன்னூரில், 42 பேரும்,கூடலூரில், 30 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஈரோட்டில்142 பேரும், மற்ற இடங்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.
எனவே,3 மாவட்டங்களில் த.மா.கா நடத்திய போராட்டத்திற்கு தொண்டர்களிடையே கூட போதுமான வரவேற்புஇல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications